தமிழ் மக்கள் தளத்தின் உறுப்பினராவது எப்படி ?
முதலில் தளத்தில் ஒரு பயனர் கணக்கு உருவாக்கி தளத்தினுள் நுழையவும்.
உங்கள் மனதில் தோன்றியதை உடனடியாக சுவற்றில் பதிவாக்க என் கணக்கு பகுதியில் செல்லவும். அங்கு What’s New என்பதில் உங்கள் பதிவை இடவும். தமிழ் மக்கள் தளம் முழுக்க உறுப்பினர்களாலேயே பதிவுகள் பதியும் படி செய்யப்பட்டுள்ளதால் கவனமாக செயல்படவும்.
தமிழ் மக்கள் தளம் வெறும் பதிவுகள் மட்டுமல்லாது நட்பு வட்டாரம் உருவாக்கவும் மற்றும் படங்கள் காணொளிகள் பதிவிடவும் அனுமதிக்கிறது. மற்ற உறுப்பினர்களை நண்பர்களாக்கி தனிமடல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
தளத்தில் நுழைந்த பின் உரையாடல் என்பதிலிருந்து கவிதை, கட்டுரை போன்ற உங்களது படைப்பின் வகையை தெரிவு செய்யவும்.
அதில் வரும் பக்கத்தில் படைப்பின் விபரங்களை கொடுத்து சேமித்துக்கொள்ளவும்.
இவ்வாறு சேமிக்கப்பட்ட பதிவை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிமைக்கவோ அல்லது திருத்தவோ அனுமதி உண்டு. அதை செய்ய அந்த படைப்பின் தலைப்பின் வலது பக்கத்தில் இருக்கும் Edit Post என்பதை தெரிவு செய்து மாற்றிக்கொள்ளலாம்.
உங்களது படைப்புகளை நீங்களாகவே நம் தளத்தில் உடனுக்குடன் வெளியிட முடியும். மாற்றங்களும் செய்துகொள்ள முடியும். உங்கள் படைப்புகளை முதன் முதலில் இங்குதான் வெளியிடவேண்டும் என்றோ அல்லது வேறு எந்த தளத்திலும் இதுவரை வராததாக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடோ கிடையாது. உங்களது சொந்த படைப்புகள் எத்தனை நாட்களுக்கு முன் படைக்கப்பட்டதாக இருப்பினும் அதை இங்கு வெளியிட உங்களுக்கு உரிமை உள்ளது.
தயவு செய்து உங்கள் சொந்த படைப்புகளை மட்டும் இவ்வாறு பதியவும். மற்றவர்கள் படைப்பை பதிவது தளவிதிமுறைகளுக்கு எதிரானது. அவ்வாறு போட வேண்டி கட்டாயத்தில் பதிவின் நிஜ படைப்பாளரின் அனுமதி பெற்று, அப்பதிவை உரையாடல் பகுதியில் பதியலாம், நிஜ எழுத்தாளரின் பெயர், இணைய முகவரி போன்றவற்றை பதிவில் குறிப்பிட்டு.
பயனாளிகளின் பதிவுகள் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவர்கள் மாணவர்கள் முதலியோரும் இத்தளத்தில் இருப்பதால் படங்கள், காணொளிகள் முதலியவற்றை நாகரீகமான முறையில் பதிவிடவும். தவறான முறையில் பயனர் கணக்கை பயன்படுத்தினால் பயனர் கணக்கை முடக்கும் முழு உரிமையும் தமிழ் மக்கள் தளத்தின் நிர்வாகத்திற்கு உண்டு. நல்ல முறையில் தளம் செயல்பட உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள்.
